குருப்பெயர்ச்சி 2020 – 2021
நிகழும் சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.11.2020 அன்று சுக்லபட்ச பிரதமை திதி, சம நோக்குள்ள அனுஷம் நட்சத்திரம், சரத் ருதுவில், சுக்கிரன் ஓரையில், பஞ்சபட்சிகளில் கோழி ஊன் தொழில் புரியும் வேளையில், தட்சிணாயனப் புண்ய காலத்தில், இரவு 9 மணி 34 நிமிடத்தில், மிதுன லக்னத்தில் – நவாம்சச் சக்கரத்தில் கும்ப லக்னத்தில், பிரகஸ்பதி எனும் குருபகவான் தன் சொந்த வீட்டிலிருந்து சர வீடாகிய சனி பகவானின் வீடான மகர ராசிக்குள் நுழைகிறார்.
ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2020-2021 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே
Guru Peyarchi 2020 for மேஷம்
அஸ்வனி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்,
நவம்பர் மாதம் மேஷ ராசியினருக்கு, இது வரையிலும் பாக்கிய ஸ்தானமான தனுஷில் ஆட்சி பலத்தில் இருந்த குரு பகவான் இராசிக்கு 10-ல் தொழில் ஸ்தானமான மகரத்திற்கு வரும் நவம்பர் மாதம் 20 ம் தேதி பெயர்ச்சியாகிறார். குரு மகரத்தில் நீச நிலை பெற்றாலும், ஆட்சி பெற்ற சனி பகபவானுடன் இணைவதால் நீசபங்க நிலையில் அமர்கிறார். எனவே குரு பகவான் சாதகமான பலன்களையே தருவார்.
பாக்கிய ஸ்தனாதிபதி தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் (கேந்திரத்தில்) பலம் பெறுவதால் தொழிலில் மேன்மையான பலன்கள், தந்தை வழியில் ஆதாயம், கூட்டுத்தொழிலில் முன்னேற்றம், தேர்வுகளில் வெற்றி போன்ற சாதகமான பலன்களை தருவார்.
மேலும் குரு பார்க்க கோடி நன்மையும் கோடி தோஷமும் விலகும் என்பதற்கேற்ப இராசிக்கு 10-ல் வரும் குரு தன்னுடைய 5-ம் பார்வையால் தன காரகாதியாகவும் இருந்து இரண்டாம் வீட்டை பார்ப்பதால் பல வழிகளிலும் தன வரவினை தருவார். பேச்சில் சாதுரியமும், நளினமும் வெளிப்படும். குருவின் பார்வை ராகுவின் மீது விழுவதால் பண தேவைகள் பூர்த்தியாகும். பிறரைக் கவரும் வகையில் பேச்சுத் திறமை அதிகரிக்கும்.
குரு தன்னுடைய 7-ம் பார்வையால் 4-ம் இடத்தை பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் மேம்படும். இதுவரை சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருப்போரின் கனவு நிறைவேறும் காலம் இது. உங்களின் சுய முயற்சியினால் பல செயல்களைச் செய்வீர்கள்.
குரு தன்னுடைய 9-ம் பார்வையால் 6-ம் இடத்தை பார்ப்பதால் சுப செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வேலையாட்களால் நன்மைகள் உண்டாகும்.
பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் குறைப்பாடு ஏற்பட கூடும் எனவே கவனம் தேவை. இந்த காலகட்டத்தில் நீங்கள் மனதை ஒருமுகப்படுத்தி முயற்சிகளை வலுப்படுத்தி வளர்க்க வேண்டியதும் கூட அவசியமாகிறது..
உடல் ஆரோக்கியம்
குரு பகவான் 6-ம் இடத்தை பார்ப்பதினால் ஆரோக்கியதில் முன்னேற்றம் உண்டு. வயிறு சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். அதிகப்படியான வேலையின் காரணமாக உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படும். எனவே உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவது வீட்டில் ராகு, சமநிலையற்ற உணவு காரணமாக உங்களுக்கு வயிற்று பிரச்சினைகளை உருவாக்கும். குடும்பத்தில் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். வருமுன் காப்பது நல்லது என்பதை உணர்ந்து நீங்கள் நோய் வருவதற்கு முன்பே உங்கள் உடல் நலத்தை காத்துக் கொள்ள வேண்டும். இதயம், நுரையீரல் முதலிய பகுதிகளில் கவனம் தேவை.
குடும்பம்
குடும்பதில் சுகமும் சந்தோஷமும் ஏற்படும், குடும்பதில் கலகலப்புடன் கூடிய சூழ்நிலை நிலவும். நீண்ட நாட்களாக தீராத பிரச்சினைகள் நீங்கும். குடும்பதில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். கொஞ்சம் விட்டு கொடுத்து பொருமையாக இருப்பதனால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்களுடைய சகோதர, சகோதரிகள் வழியே நிறைய மன சங்கடங்கள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. சிலர் பணி நிமித்தமாக பூர்வீகத்தில் இருந்து வெளியூருக்கு செல்ல வேண்டியிருக்கும். தாய்மாமன் வகை உறவுகளால் நன்மைகள் நடைபெறும். இருசக்கரம், நான்கு சக்கர வண்டி வாங்கும் யோகம் உண்டாகும்.
உத்தியோகம்
குரு பகவான் இராசிக்கு 10-ல் வருவதால் தொழிலில் முன்னேற்றம் மற்றும் மாற்றங்களும் உண்டாகும். அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம். பதவி உயர்விற்காக காத்திருப்போருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறுவார்கள். மேலதிகாரிகளின் உதவியும் அனுசரனையும் கிடைக்கும். உடன் பணிபுரிவோரும் நட்பு பாராட்டுவார்கள். தொழில் ஸ்தானத்தில் சனி பகவானும் இருப்பதால் சிறுசிறு அலைச்சல்களும் உண்டு. ஆனாலும் வாழ்க்கையில் ஒரு சிறந்த நேரத்திற்கு வழிவகுக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.
தொழில் வியாபாரம்
குரு பகவான் இராசிக்கு 10-ல் தொழில், வியாபரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். கடந்த கால உழைப்பிற்கு ஏற்ற பலனை தற்போது எதிர் பார்க்கலாம், கிடைக்கவும் செய்யும். பணியாளர்களின் தொழில் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பும் உறுதுணையும் கிடைக்கும். செய் தொழிலை விட்டு நன்றாக விரிவு படுத்துவீர்கள். சிலர் அடிமை தொழில் செய்வதை விட்டு புதிதாக சொந்தத் தொழில் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.
தொழில் ஸ்தானத்தில் சனி பகவானும் உள்ளதால் உங்களுடைய பணியில் தேவையில்லாத சிற்சில சங்கடங்கள் தோன்றும், ஆதலால் நீங்கள் தொடங்கிய காரியங்களில் சின்ன சின்ன தோல்விகள் ஏற்பட்டாலும் அதற்கு மனதில் இடம் கொடுக்காமல் இருப்பின் அந்த காரியத்தில் அனுகூலம் கிடைக்கும். மேலும் சில தடை தாமதங்கள் வந்து நிற்கும் இருந்தாலும் அதற்கு பயப்படாமல் முயற்ச்சித்தால் நிச்சயம் அது முடிவில் ஒரு நல்ல பலன்களை தரும்.
பெண்கள்
குரு ராஜயோக அமைப்பை பெற்று சுபமான பார்வையை உங்க ராசிக்கு நான்காம் வீட்டினை பார்வை இடுகிறார், பெண்கள், இல்லத்தரசிகளுக்கு பணம் சேமிப்பு அதிகரிக்கும் கணவன் மனைவி இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்தாலும் அது எளிதில் நீங்கி பாசமும் அன்னியோன்யமும் அதிகரிக்கும். பெண்மணிகள் உற்றார் உறவினர்களைச் சந்தித்து மகிழ்வார்கள். திருமணம் முயற்சிகள் சுபமாக நடைபெறும். காதலில் மட்டும் கவனம் தேவை. பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும்.
காதலரிடையே வாதங்களை தவிர்க்க வேண்டும். இல்லை எனில் பிரச்சனைகள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு. பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. உங்கள் கோபமே உங்களுக்கு எதிரி ஆகும். நீங்கள் காட்டும் பரிவும் பாசமும் அனைவரிடமும் நல்லுறவை வளர்க்க உதவும்.
நிதிநிலை
பண வரவு உண்டு. நிதிநிலையை பொறுத்தவரை ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவும். சொத்து, வண்டி வாகனம் வாங்கலாம். வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள் கிரகப்பிரவேசம் செய்யலாம். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். தாங்கள் கேட்க்கும் இடங்களில் எல்லாம் கடன் தர முன் வருவார்கள். எதிர்பாராமல் வரும் பணவரவை நல்லபடியாக தக்க வைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும்.
ஆனால் கடன் விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் கடினமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய காலமாக இனி வரும் காலங்கள் அமைய இருக்கிறது. கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திலிருந்து எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்வீர்கள். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும்.
இந்த குருப்பெயர்ச்சியில் குரு தங்களின் இராசிற்கு 12-ம் விரையாதிபதியாகவும் வருவதால், அவசியமான செலவுகளுக்காக மட்டும் செலவுகளை செய்யுங்கள், ஆடம்பரங்களுக்காக செலவுகளைச் செய்தால் பின்னாளில் சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. சேமிப்பு கரையும் வாய்ப்பும் இருக்கிறது. சொத்துக்கள் மீது கவனம் தேவை.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு இந்த குருபெயர்ச்சியில் தங்கள் கட்சியின் மதிப்பும் மரியாதையும் உயரும். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பர். செயல்கள் எதிர்பார்த்த திருப்பங்களை ஏற்படுத்தும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். எதிரிகள் தொல்லை நீங்கும். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும், தேர்தலில் வெற்றிகளும் தேடிவரும்.
விவசாயிகள்
விவசாயிகள் மகசூல் சிறப்பாக கிடைக்கப் பெறுவார்கள், பணப் பயிர் விளைசல் சிறப்பாக அமையும். கால்நடைகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். புதிய கால்நடைகளை வாங்கிப் பலன் பெறுவர். தானியப் பொருள்கள் விற்பனையில் நல்ல லாபம் பெறுவர். அசையாச் சொத்துக்களால் வருமானம் வரத் தொடங்கும்.
கலைஞர்கள்
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. செலவுகளைக் குறைக்க திட்டமிடுவது நல்லது. வெற்றிகளால் புகழ் உண்டாகும். எதிரிகளை அறிந்து நீங்களே விலகுவீர்கள். ரசிகர்களின் ஆதரவுடன் கிடைக்கும்.
மாணவ – மாணவியர்
மாணவ மாணவியருக்கு தாங்கள் பயிலும் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள். கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள்.
பரிகாரம்:
செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று செவ்வரளி சாற்றி வழிபட்டு ஆலயத்தை வலம் வரவும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்கி வரலாம். ஏழை குழந்தை கல்வி மற்றும் மருத்துவ செலவிற்க்கு உதவுங்கள்.
Guru Peyarchi 2020 ரிஷபம்
கிருத்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்.
நவம்பர் மாதம்20-ம் தேதி ரிஷபம் ராசிக்கு இதுவரை அஷ்டம குருவாக எட்டில் இருந்து இனி பாக்ய ஸ்தான குருவாக ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார். இது நாள் வரையிலும் தங்களுக்கு இருந்த வந்த கஷ்டங்கள் நீங்கி வளம் காணப் போகிறீர்கள். தகவல் தொடர்பு, துணிவு, கடவுள் நம்பிக்கை, இளைய உடன் பிறப்புக்கள் ஆகியவற்றின் மூலம் ஆதயம் அமையும்,
குரு மகரத்தில் நீசம் பெற்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். தங்களுக்கு தற்போது அஷ்டம சனியும் நடப்பதால் தங்களுக்கு மன அழுத்தம் உண்டு. ஆனாலும் தங்கள் இராசிக்கு சனி பகவான் தர்ம கர்மாதிபதியாகவும் வருவாதால் நற்பலன்களையும் தர தவற மட்டார்.
குரு பகவான் தன்னுடைய 5-ம் பார்வையால் தங்களின் இராசியினையும் 7-ம் பார்வையால் 3-ம் இடத்தையும் 9-ம் பார்வையால் 5-ம் இடத்தை பார்க்கிறார், இதுவரையிலும் இருந்து வந்த வீண் பண விரையங்கள் இனி இருக்காது. தங்களின் முன்னேற்றத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் ஒரு முடிவுக்கு வரும். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் அறிவாற்றல் மேம்படும்.
இந்த பெயர்ச்சியில் சகோதர சகோதரிகளுக்கு நல்லது நடக்கும். சிலருக்கு திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். கொடுத்த வாக்கினை தாங்கள் தனி பாணியை அமைத்துக் கொண்டு நிறைவேற்றி புகழடையக் கூடிய காலகட்டமாகும் அன்பு, அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் கூடும் கால கட்டம் ஆகும். உங்கள் மனதில் தன்னம்பிக்கை பெருகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு உண்டு.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். இதுவரை நோயினால் அவதிபட்டு கொண்டிருந்தவர்களின் தேக ஆரோக்கியம் மேம்பட்டு தங்களின் தேகத்தில் புதிய பொலிவு உண்டாகும். ஆனாலும் அஜீரணம் மற்றும், அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சனைகளும் ஏற்படும், சரியாக உணவு முறையினால் மட்டுமே தவிர்க்கலாம். அவ்வாறு கவனிக்கப்படாவிட்டால் மருத்துவமனை நாட வேண்டிய சூழல் வரும் கொழுப்புச் சத்து நிறைந்துள்ள உணவுகளைப் பொருட்களை தவிர்க்கவும். இரத்த அழுத்தத்தையும் சர்க்கரையின் அளவையும் சரி பார்த்து சீராக வைத்துக் கொள்ளுங்கள்.
குடும்பம்
உங்கள் குடும்பத்தின் ஆதரவைப் பெறுவீர்கள், வீட்டு உறுப்பினர்களிடையே ஒருவருக் கொருவர் புரிதல் அதிகரிக்கும். இதுவரையிலும் நோயினால் அவதிபட்டு வந்த பெற்றோர்களின் ஆரோக்கியமும் இப்போது மேம்படும். இருப்பினும் பெற்றோரின் உடல்நலம் குறித்து நீங்கள் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும், குடும்பத்தில் சந்தோஷமான சம்பவங்கள் நிகழும் இதனால் குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
குடும்ப மூத்தவர்கள் குடும்பம் சிறக்க மற்றும் நல்லுறவு நிலவ, மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். தங்களின் பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, குழந்தைகளை மதித்து நடக்கவும். இதுவரை வீண் சச்சரவுகளையும் செலவுகளையும் சந்தித்த நீங்கள் இனி பக்குவமாகவும், இதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் ஈகோ பிரச்னை ஏற்படுவதைத் தவிருங்கள்.
உத்தியோகம்
அலுவலகத்தில் உங்களின் அலுவலகப் பணிகள் அனைத்தும் நினைத்தபடி வெற்றிகரமாக முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள். பணியில் இடை இடையே வரும் தடைகளையும் தொந்தரவுகளையும் சாதூர்யமாக சமாளிப்பீர்கள். உங்களிடம் உங்களின் மேலதிகாரிகள் நட்புடன் நடந்துகொள்வார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது. புது வேலை கிடைக்கும். இருப்பினும் அவசரப்பட்டு வேலையை விடுவதோ, புது வேலையில் சேர்வதிலோ கவனம் தேவை.
பணி புரியும் இடத்தில் மேலதிகாரிகளுடனும் நல்லுறவு மேம்படும். மேலதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். நீங்கள் பிறருடன் அன்புடன் பழகுவீர்கள். தேங்கிக் கிடக்கும் பழைய பணிகளை விரைந்து முடித்தல் அவசியம். உங்கள் மனதில் கருணை இரக்கம் போன்ற நல்ல குணங்கள் மேம்படும். மொத்தத்தில் உங்கள் வாழ்க்கைப் பயணம் இந்தப் பெயர்ச்சியில் வெற்றிகரமாக அமையும். வீரியத்தைக் காட்டிலும் காரியம் தான் முக்கியம் என்பதை உணருந்து செயலாற்றுவீர்கள்.
தொழில் வியாபாரம்
கூட்டுதொழிலில் மாற்றம் செய்ய நினைக்கும்போது முன் கூட்டியே தங்களுடைய கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசித்து சுமுகமான நிலைமையை ஏற்படுத்தி பின்னர் மாற்றம் செய்வது சிறப்பு. வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும, இருப்பினும் கூடுதல் அக்கறையோடு வியாபாரத்தினை மேற்கொள்ளவும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டி இருக்கும். ஊக வணிகம் சிறக்கும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். எதிலும் விழிப்புடன் இருப்பது நல்லது. பல முறை நன்கு ஆலோசித்த பிறகே புதிய தொழில் அல்லது புதிய முதலீடுகளைச் செய்யவும்.
பெண்கள்
குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவினை பேணுவீர்கள். நீங்கள் அதிகமாக பதட்டப்படுவதையும் , உங்கள் வாழ்க்கை துணையுடன் கடுமையான வாதங்களையும் தவிர்த்தல் நன்மையை உருவாக்கும். ஒருவருக்கொருவர் புரிந்துணர்வைக் காண்பிப்பது அனைத்து வாதங்களையும் தீர்ப்பதில் உங்கள் சிறந்த நலன்களுக்காக செயல்படும் இந்த பெயர்ச்சிக் காலத்தில் இனிமையான தருணங்களை சந்திப்பார்கள்.
கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். அன்னியோன்யம் கூடும். காதலில் இனிமை உண்டு. காதலர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பும் அரவணைப்பும் உங்கள் பந்தத்தை நெருக்கமாக்கும். கணவருடன் ஈகோ பிரச்னை ஏற்படுவதைத் தவிருங்கள். உறவினர்களும் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். அண்டை அயலார் ஆகியவர்களுடன் தற்காலிகமாக உறவு சற்றே சிரமம் தரலாம் என்பதால், கவனம் தேவை.
நிதிநிலை
பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உங்கள் வருமானம் நிலையாக இருக்காது.கடன் விஷயங்களில் எச்சரிக்கை தேவை. சில நிலை தடுமாற்றங்கள் வந்தாலும் நஷ்டங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்வீர்கள். புதிய முதலீட்டினால் ஓரளவிற்க்கு ஆதாயம் கிட்டும். இதனை நீங்கள் பழைய கடங்களை திருப்பிச் செலுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்வது நல்லது. பழைய காலி மனையை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள்.
கடன் பிரச்சினைகள் தலை தூக்கும் கடன் விஷயங்களில் எச்சரிக்கை தேவை. அதிக கடன்களை வாங்க வேண்டாம் பின்னாளில் வரும் பிரசனைகளுக்கு மூல காரணமாகிவிடும் கூட பல சவால்களை நீங்கள் சந்திக்க நேரும். அவசர செலவிற்கு வெளியாரிடம் வாங்கியிருந்த பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து விடுவீர்கள். பழுதாகி இருந்த வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கொள்வீர்கள்.
அரசியல்
அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுதல் அவசியம், அதனால் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ள மிகுந்த சிரத்தை எடுக்க வேண்டி இருக்கும். சச்சரவுகள் ஏற்படுத்தும் விஷயங்களில் மௌனம் காப்பது சிறப்பு. வாயைக் கொடுத்து அவஸ்த்தைபட வேண்டாம். பல சவால்களை நீங்கள் சந்திக்க நேரும். இயக்கம், சங்கம் ஆகியவற்றில் புதுப் பதவிகள் வரும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் விரும்பியபடி சாதகமாக இருக்கும் கால்நடைகளால் நன்மைகள் உண்டாகும். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். வேலையாட் களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம்.விவசாயத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். விவசாய பொருட்களை களைப் போராடி விற்பீர்கள்.
கலைஞர்கள்
தங்களின் முன்னேற்ற எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். தங்களின் அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய வாசகர்கள் மற்ற்ரும் நண்பர்களால் பலனடை பெறுவீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முழு முனைப்புடன் ஈடுபட்டு முடித்து விடுவீர்கள். உங்களுடன் பணியாற்றும் பிற கலைஞர்களும் உங்களுக்கு அனைத்து விதங்களிலும் உறுதுணையாக இருந்து உங்களை அனுசரித்து
நடந்து கொள்வார்கள். இதுவரை தாங்கள் சந்தித்து வந்த வீண் சச்சரவு மற்றும் செலவுகளை சமாளித்து இனி நீங்கள் பக்குவமாகவும், இதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள்.
மாணவ – மாணவியர்
கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி கற்பதில் சிறப்பாக செயலாற்றுவார்கள். உயர்கல்விக்குத் தயாராகி வருபவர்களும் தங்கள் முயற்சிகளினால் வெற்றியைப் பெறுவார்கள். தேர்வின் முடிவுக்கு காத்திருப்பவர்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். மாணவமணிகள் கல்வியிலும் பிற விளையாட்டிலும் நன்கு முன்னேற்றம் பெறுவீர்கள். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சியினை மேற்கொள்வது அவசியம். அறிவாற்றல் மேம்படும். கற்பனை வளம் பொங்கும்.
பரிகாரம்:
அருகில் இருக்கும் கோயிலில் அம்மனுக்கு வெள்ளிக் கிழமையில் மல்லிகை மாலை சாற்றி அர்சனை செய்து வழிபட்டு வருவது தங்களுக்கு சிறப்பாய் அமையும். ஆலய அர்ச்சகர்களுக்கும், அந்தணர்களுக்கும், முடிந்த அளவு தானம் செய்யவும்
Guru Peyarchi 2020 மிதுனம்
மிருகசீரிஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
நவம்பர் மாதம் உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது எட்டாம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். குரு மகரத்தில் நீசம் பெற்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார்.
குரு பகவானால் திட சிந்தனைகளுடன் செயல்பட்டு உங்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆன்மிகவாதிகளின் ஆசிகள் கிடக்கப் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாட்டைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு அஷ்டம குருவாக பெயர்ச்சி அடைகிறார். எனவே நீங்கள் பொறுமையுடனும் விடா முயற்சியுடனும் செயல்பட வேண்டிய நேரமிது. உங்களின் செயல்கள் யாவும் சமூகநோக்கு கொண்டு செய்வீர்கள்.
குரு தன்னுடைய 5-ம் பார்வையால் 12-ம் இடத்தை பார்ப்பதால் வெகுதூரத்திலிருந்து நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். அவசியமான காரியங்களுக்காக அவ்வப்போது திடீரென்று அவசரப் பயணங்களைச் செய்ய நேரிடும். மனதிற்கு இனிய பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
குரு தன்னுடைய 7-ம் பார்வையால் 2-ம் இடத்தை பார்ப்பதால் தன காரகாதியாகவும் இருந்து இரண்டாம் வீட்டை பார்ப்பதால் பல வழிகளிலும் தன வரவினை தருவார். உங்களின் பேச்சில் நிதானமும் பொறுமையும் இருக்கும். எதிரும், புதிருமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.
குரு தன்னுடைய 9-ம் பார்வையால் 4-ம் இடத்தை பார்ப்பதால் விருப்பமான வீடு, வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்ளில் தாங்கள் முன்னிலை படுத்தப்படுவீர்கள்.
உடல் ஆரோக்கியம்
உங்களின் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். வெகு நாட்களாக உங்களை துன்புறுத்தி வந்த உடல் உபாதை நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். மருத்துவச் செலவுகள் படிப்படியாக குறையும். இருப்பினும் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம் இதுவாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு என்வே வண்டி வாகன பயணங்களில் கவனம் தேவை.
குடும்பம்
குடும்ப உறுப்பினர்களிடம் கனிவான அணுகுமுறை கையாளுங்கள். தங்களுக்கு தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரிதத்து செல்லுதல் வேண்டும். நீங்கள் உங்கள் நேரத்தை உங்கள் குடும்பத்திற்காக ஒதுக்குவீர்கள், இது மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்க பங்களிக்கும். குடும்பதுடன் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.
உங்கள் மனைவியும் தாயும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெரியோரிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் விலகிச் சென்றிருந்த உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.
குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு உயரும். பெரியோரிடம் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
உத்தியோகம்
உங்களுக்கு கீழ் பணி புரிபவர்களுக்கு வேண்டியவற்றை நிறைவேற்றி அவர்களை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்வீர்கள். இதுவரை அலுவலகத்தில் ஒதுக்கிவைக்கப் பட்டிருந்தவர்களுக்கு இக்காலகட்டத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். சமயோசித புத்தியுடன் செயல்பட்டு மூத்த அதிகாரிகளின் மனத்தில் இடம் பிடிப்பீர்கள். இதனால் உங்களுக்கு பிறரின் பொறாமைகளுக்கும், போட்டிக்கும் ஆளாக நேரிடும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.
உத்யோகஸ்தர்கள் தங்களின் அலுவலக பணிகளை திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விடவும் இல்லையெனில் சில நேரங்களில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். சில நேரம் தாங்கள் உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு சரியான நேரத்தில் வந்து சேரும். நாட்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடத்திற்கே இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும்.
தொழில் வியாபாரம்
பணி மற்றும் தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் நீண்ட கால தாமதத்திற்குப் பின் நிறைவேறும். உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட கூடும். அதனால் செல்வ வளம் பெருகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். செய்யும் தொழிலில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயர் பெறுவீர்கள்.
வியாபாரிகள் தங்கள் விற்பனைப் பிரதிநிதிகளின் உதவிகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். புதிய தொழிலில் தொடங்க வாய்ப்பு உள்ளது. மேலும் புதிய வாடிக்கையாளர்களைக் கவரவும் இருப்பவர்களை தற்காத்துக் கொள்ளவும் புதிய சலுகைகளை சந்தையில் அறிமுகப் படுத்துவீர்கள். தொழில் பங்குதாரர்கள் மற்றும் கூட்டாளிகள் உங்களைக் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவுகள் எடுப்பார்கள்.
தொழில் நன்றாக நடப்பதால் புதிய கடன்கள் வாங்க நேரிடாது. வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நெடுநாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த உங்கள் விண்ணப்பம் அரசாங்கத்தால் சாதகமாக பரிசீலிக்கப்படும். ஊக வணிகம் மூலமாகப் பணம் வரும். வியாபார தந்திரங்களை நன்கு கற்றுக் கொள்வீர்கள்.
பெண்கள்
அனைவரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வீர்கள். எண்ணங்களில் ஏற்பட்ட தடுமாற்றம் நீங்கும். உங்களின் தேகத்தில் புதிய பொலிவு உண்டாகும். நீங்கள் நினைத்த எண்ணங்கள் சரியான செயல் வடிவம் பெற்று வெற்றியில் முடியும். தாங்கள் எல்லோருடனும் மனம் விட்டுப் பேசும் சூழ்நிலை ஏற்படும். உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
பண வரவு ஒரளவு சீராக இருக்கும். அதேசமயம் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தேவை இல்லாத வார்த்தைகளைப் பேசி பிரசனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். புதிதாக வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
தம்பதியரிடையே வீண் சந்தேகத்தைத் தவிர்த்திடுங்கள். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
நிதிநிலை
வருமானம் சீராக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும். உங்கள் வீட்டிற்கான புதிய பொருட்கள் மற்றும் பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது. அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். பழைய கடன்களை முழுவதுமாக திருப்பிச் செலுத்துவீர்கள். பணப்பற்றாக் குறையைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும்.
பூர்வீகச் சொத்துக்களில் பாகப்பிரிவினை பங்கு கிடைத்துவிடும். இருப்பினும் பொருளாதார நிலை சிறிது மந்த நிலையில் தான் இருக்கும். சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ்களைச் சரி பார்த்து வாங்குங்கள்.எதிர்பாராத வகையில் சௌபாக்கியங்கள் தேடி வரும்.
வீட்டினை விரிவாக்கம் செய்ய கூடுதல் அறை அல்லது மேல்தளம் அமைக்கும் முயற்சிகள் நல்ல விதத்தில் நிறைவேறும். அடகிலிருந்த நகையை மீட்க வழி பிறக்கும்.
அரசியல்
தங்களின் கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் சூழல் ஏற்படலாம், மேலும் தாங்கள் வெற்றிகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் தனி நபர் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. தங்களின் தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள். தங்களின் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட புதுவித அணுகுமுறையினால் தீர்வு பெறுவீர்கள். தாங்கள் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
தங்களின் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரச்னைகளின் மூலாதரத்தை தாங்கள் கண்டறிந்து அதனை எளிதாக தீர்ப்பீர்கள். புது பதவிகள், பொறுப்புகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்து இடுமுன் தங்களின் வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறுவது மிக அவசியம்.
விவசாயிகள்
விவசாயிகள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயம் நல்ல விதத்தில் முடிவடையும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும் திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும். பணப்பற்றாக்குறையைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டிவரும் புதிய விவசாய உபதொழிலில்களில் ஈடுபட வாய்ப்பு உண்டாகும். கொஞ்சம் சிக்கனத்தை கையாள வேண்டிய காலகட்டம். எனவே செலவு விஷயங்களில் கவனமாக இருங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.
கலைஞர்கள்
உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் பெயரும், புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான விஷயங்களிலும் தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படுவீர்கள். உங்களின் நேர்மையான போக்கை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும். அரசால் அனுகூலம் உண்டு. புதிய ஒப்பந்தங்களினால் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
மாணவ – மாணவியர்
கல்வியில் தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிலும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். படிப்பில் முன்னேற்றம் பெறுவீர்கள். விளையாட்டுத் துறைகளில் ஈடுபட்டு உடல் ஆரோக்யத்தை வளர்த்துக் கொள்வீர்கள். தங்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு.
பரிகாரம்:புதன் மற்றும் சனிக்கிழமையில் தொடர்ந்து பெருமாள் வழிபாடு செய்து வருவதன் மூலம் காரிய தடைகள் ஏற்படாமல் இருக்கும்.
Guru Peyarchi 2020 கடகம்
புனர்பூசம் 4 பாதம், பூசம், ஆயில்யம்
நவம்பர் மாதம் உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்களுக்கு செல்வச் செழிப்பை அளிப்பார். குரு மகரத்தில் நீசம் பெற்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார்.
குரு தன்னுடைய 5-ம் பார்வையால் 11-ம் இடத்தையும், தன்னுடைய 7-ம் பார்வையால் உங்கள் இராசியினையும் தன்னுடைய 9-ம் பார்வையால் 4-ம் இடத்தையும் பார்க்கிறார். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும். புதிய செயல்கள் செய்ய அஸ்திவாரம் போடுவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.
உங்கள் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். தெய்வ அனுகூலத்தால் செயற்கரிய பல செயல்களை செய்வீர்கள். குல தெய்வப் பிரார்த்தனை வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்குத் தடைகள் நீங்கி திருமணம் கூடி வரும். தங்களின் சகோதர வகையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.
உடல் ஆரோக்கியம்
உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். ஆனால் பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. உள்மனத்தில் இனம்புரியாத பயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. உங்கள் மனதில் தனிமையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு மனச் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதயம், நுரையீரல் முதலிய உறுப்புகளின் ஆரோக்கியதிதில் அக்கரை தேவை
குடும்பம்
குடும்ப உறவுகளிடமும் மற்றும் பிற உறவுகளிடமும் நல்லிணக்கமும் ஒற்றுமையும் காணப்படும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு முழுமையாக உங்களின் வளர்சிக்கு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் நண்பர்களிடம் சுமுகமான உறவு தொடரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
சகோதர, சகோதரிகளால் சில பிரச்னைகள் ஏற்படலாம். தாங்கள் அவர்களுடன் அனுசரித்து, விட்டுக் கொடுத்து அமைதியுடன் நடந்து கொள்வது நல்லது. இருப்பினும் இந்தப் பிரச்னைகள் தாமாகவே விலகிவிடும். குடும்பத்தில் அமைதி சந்தோஷம் குடிகொள்ளும். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். நோய்வாய் பட்டிருந்த தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும்.
உத்தியோகம்
பணியிடத்தில் சுமுகமான நிலை இருக்கும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். எதிர்பாராத புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கும். உங்களின் நேர்மையான நடத்தையை அனைவரும் பாராட்டுவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் சாதனை புரிவீர்கள். உங்கள் செயல்கள் இடையூறுகள் இன்றி சுலபமாக நடைப்பெறும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ராஜ தந்திரத்தை அறிந்து அதற்கேற்றவாறு பணி ஆற்றுவீர்கள். தாங்கள் புது பதவிகள் மற்றும் பொறுப்புகளுக்குத் தேர்ந்து எடுக்கப்படுவீர்கள். புது வேலை வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. நீங்கள் எல்லாவற்றிலும் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயலாற்றுவீர்கள்.
குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். செய்யும் செயல்களில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டு மளமளவென்று முடிந்து விடும். தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வுக் கான தேர்வில் வெற்றி பெற்று புது பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். பணி செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும்.
தொழில் வியாபாரம்
கட்டுமானம் மற்றும் வாகனம் தவிர இதர தொழில்கள் மற்றும் கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தற்சமயம் தொழிலில் பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும் உங்கள் தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் நேர்மையான நடத்தையை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் செயல்கள் காலதாமதமாக வெற்றி பெறும்.
வண்டி வாகன தரகு, கமிஷன், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கணினி உதிரி பாக வியாபாரம் செய்வோர் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், மக்களின் ரசனைகளையும் புரிந்து கொண்டு புது யுக்திகளை கையாளுவீர்கள்.
கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. புதிய முதலீடுகளைத் தள்ளிப் போடவும். இருக்கும் தொழில் புரியும் இடத்தினை நவீனமாக்குவீர்கள். தொழிலில் திறமையான பணி ஆட்கள் கிடைக்கப் பெற்று பணியில் அமர்த்துவீர்கள். தொழில் முறை பயணங்களால் பயன் கிட்டும்.
பெண்கள்
கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பண வரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பேச்சில் கனிவு பிறக்கும். தாங்கள் எதற்க்கும் மற்றவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். கணவர் உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாம்ல் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். மேலும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.
தங்களின் தாழ்வு எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள். தங்கள் வாழ்க்கைத் துணைவரின் வழி உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தங்களின் தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். சமையலறையினை நவீனமாக்குவீர்கள்.
அவ்வப்போது உணர்ச்சிவசப் படுவீர்கள். தங்களின் அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தங்களுக்குள்ளே வைப்பது நல்லது மேலும் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வருவதை கட்டாயம் தவிக்கவும். தம்பதிகள் தங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது தங்களின் ஒற்றுமைக்கு மேலும் சிறப்பாய் அமையும். நீங்கள் எதிலும் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம்.
நிதிநிலை
உங்களின் முயற்சியின் பேரில் நிதிநிலை ஓரளவு சீராக இருக்கும். உங்கள் சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். வாராகடன்கள் வசூலாகும். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கைக்கு வந்து சேரும். பங்குச்சந்தை வாணிகத்தின் மூலம் இலாபம் ஏற்படும்.
சிலருக்கு தங்களின் பூர்வீகச் சொத்தை மாற்றிப் புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். திடீர் செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும்.
தங்களின் சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். தங்களின் நிதி நிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். தாங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் சேமிப்பைப் பெருக்கிக் கொள்ளலாம். கடன் வாங்கும் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை உடன் வாங்குவது நல்லது.
அரசியல்
உங்களின் விவாதத் திறமை அதிகரிக்கும். முக்கியமான விவாதங்களில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். உங்களின் செயல்களை முறைப்படுத்தி காரியம் ஆற்றுவீர்கள். விருப்பு, வெறுப்பின்றி அனைவருக்கும் உதவி செய்வீர்கள். இதனால் வெளி வட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
தங்களுக்கு கட்சியில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமுடன் செயல்படவும். தொண்டர்களிடம் கோபம் அடையாமல் கடமைகளைச் செய்து வரவும். பேச்சில் கண்ணியம் குறையாது கவனமாக இருக்கவும் புது பொறுப்புகள் தேடி வரும்.
விவசாயிகள்
தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்பிக் கொள்வீர்கள். இதனால் புதிய திட்டங்களை நிறைவேற்று வதில் தடை, தாமதங்கள் ஏற்படும். பூர்விகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.
கலைஞர்கள்
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். உங்களுக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சிறிது காலதாமதம் ஏற்படும். இருப்பினும் பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். தங்களின் அனுபவம் மற்றும் அறிவுப்பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவதுடன் தங்கள் தேவைகளையும் நிறைவேற்றுக் கொள்வீர்கள்.
சிறிது காலத்தில் உங்களுக்கு இருந்து வரும் சாதகமற்ற சூழ்னிலைகளும் நிலைமைகளும் மாறிவிடும். பல சுப நிகழ்ச்சிகள் மற்றூம் பொது விழாக்களில் கலந்து கொண்டு முதல் மரியாதை கிடைக்கப் பெறுவீர்கள். புதியவரின் நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
மாணவ – மாணவியர்
கல்வி பயிலும் மாணவர்கள் மிகுந்த சிரத்தையுடன் முயற்சிகள் மேற்கொண்டு படிக்க வேண்டும். முழு முனைப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களையும் பெறுவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடம் நல்ல பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு .
பரிகாரம்:
திங்கள்கிழமை தோறும் வடக்கு நோக்கியு வீற்றிருக்கும் அம்மன் கோயிலில் அர்ச்சனை செய்து வணங்கி வரவும்.
Guru Peyarchi 2020 சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம்
நவம்பர் மாதம் இதுவரை தனுசு ராசியில் இருந்த குரு பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு மகரத்தில் நீச நிலை பெற்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். இப்பெயர்ச்சியில் குரு பகவான், தங்களது ராசியான சிம்ம ராசிக்கு 6 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யத் தொடங்குவது ஒரு சாதகமற்ற நிலை எனலாம் தெய்வ நம்பிக்கையுடன் வரும் காலத்தை சந்தியுங்கள், தங்களுக்கு நிச்சயம் வெற்றி தான்.
குரு தன்னுடைய 5-ம் பார்வையால் 10-ம் இடத்தையும், குரு தன்னுடைய 7-ம் பார்வையால் 12-ம் இடத்தையும் பார்ப்பதால் குரு தன்னுடைய 9-ம் பார்வையால் 2-ம் இடத்தை பார்க்கிறார். ஆன்மிக சிந்தனைகள் தோன்றும். ஆலயங்களைத் தேடிச் சென்று வழிபடுவீர்கள்.
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். நண்பர்கள் வலிய வந்து உறவு கொண்டாடுவார்கள். தங்களின் குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைத்துப் பேச வேண்டாம். உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும்.
உடல் ஆரோக்கியம்
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நோய் தொற்றுகள் ஏற்படாத வகையில் நீங்களே உங்கள் ஆரோக்கியத்தை தற்காத்துக் கொள்ளுதல் அவசியம். மனச்சோர்வு உடற்சோர்வு என சிரம பலன்கள் நீடிக்கும். மருத்துவம் சார்ந்த செலவுகள் ஏற்படும் சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
குடும்பம்
கணவன் மனைவி உறவு சாதாரணமாக இருக்கும். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறு சலசலப்புகள் ஏற்படும். குடும்பத்திலும் சிறு சிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும் குடும்பத்தில் ஏற்படும் சில தேவை இல்லாத அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.
குடும்ப மூத்தவர்களின் ஆலோசனை கேட்பதால் உங்களின் வாழ்க்கை வளப்படுத்தும், திருமண வயதில் உள்ள மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். மகனாயின் நல்ல இடத்தில் மருமகளும் அமைய பெறுவீர்கள். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.
தங்களின் சகோதரர்கள் சில முக்கிய தருணங்களில் தங்களுக்கு தகுந்த ஆலோசனை கூறி வழி நடத்துவர். குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகள் படிப்பில் கவனம் தேவை. தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
உத்தியோகம்
பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வேலையில் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம்,போன்றவை கிட்டும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்ள் உங்களுக்கு பிரச்சனைகளை தர நினைப்பார்கள் ஆனால் நீங்கள் மனதில் ஊக்கத்தையும் உறுதியையும் ஏற்படுத்திக் கொண்டு செயல்படுவீர்கள். அதேபோல் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். தங்களின் தைரியம் பிரகாசிக்கும் நேரமிது.
பணப் பற்றாக்குறை காரணமாக, உங்கள் பழைய கடன்களையும் அடைக்க முடியாமல் இப்பெயர்ச்சியில் போகலாம். இருப்பினும் ஊக்கத் தொகை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தங்களின் விருப்பப்படி இருக்கும். உங்கள் வேலை மற்றும் தொழில் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தாங்கள் கவனத்துடனும், பொறுமையுடனும் கையாளுவீர்கள். வெளிநாடு சென்று வர யோகம் உண்டாகும். உங்களது மேலான யோசனைகளை நிர்வாகம் பரிசீலிக்கும்.
படித்துவிட்டு வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வேலை சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.வேலைச் சுமை அதிகரிக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர்.
தொழில் வியாபாரம்
தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக புதிய திருப்பங்கள் ஏற்படும். சிலர் புது தொழில் அல்லது புது கிளைகள் தொடங்குவீர்கள்.புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட்டவும். கூட்டுத்தொழில் புரிவோர் சற்று கவனமாக இருப்பது நல்லது.
சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நல்ல வருமானத்தைப் பெற முடியும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை. தாங்கள் செய்யும் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் தேடி வரும். நவீன எந்திரங்கள் வாங்கி தொழிலை மேலும் விரிவுபடுத்துவீர்கள்.
தொழிலில் பொதுவாக, சராசரி பலன்கள் கிட்டும். தாங்கள் செய்யும் நிதி, மருத்துவம், ஏற்றுமதி, வெளிநாட்டு வியாபாரம் போன்ற தொழில்கள் சிறந்து விளங்கும். தொழிலில் முன்னேற நீங்கள் முழு மூச்சுடன் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. சில சமயம் எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.
பெண்கள்
பெண்களுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். அதே சமயம் கணவருடன் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு மறையும். இக்கால கட்டத்தில் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆடை , அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். சிக்கலான தருணங்களையும், நீங்கள் நன்கு சமாளிப்பீர்கள். எதிரிகள் தாமாக விலகிச் செல்வார்கள்.
தாங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் – மனைவி இடையே நல்ல ஒற்றுமையும் அன்யோனியமும் இருக்கும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். காதலர்கள் தம்பதிகளாக மாறுவார்கள். மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
நிதிநிலை
உங்கள் நிதி நிலை சாதாரணமாக ஒராளவிற்கு இருக்கும். அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். பொருளாதாரத்தில் ஸ்திரத் தன்மையை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் மிகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வெளியில் கடனாக கொடுத்திருந்த பணம் திரும்பி கைக்கு வரத் தாமதமாகும். கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர் காலத்திற்கு சேமிப்பு என்பது இயலாது போகும்.
குடும்பத்தில் பாகப்பிரிவினை ஏற்படும். அசையாச் சொத்துக்களின் மூலம் வருமானம் வரத் துவங்கும். புதிய பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். இப்பெயர்ச்சியில் சொத்து வாங்கல் மற்றும் பரம்பரை சொத்து மூலம் ஆதாயம் பெறுதல் போன்றவற்றிற்கான வாய்ப்புகள் குறைவு.
கடன்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தேவையான மற்றும் அத்தியாவசியமான செலவுகளுக்காக மட்டுமே வாங்குதல் வேண்டும். சுப செலவுகளையும் இக்காலகட்டத்தில் கட்டுக்குள் வைப்பது நல்லது. வீடு, மனை, ஆபரணங்கள் போனறவை வாங்கும் விஷயங்களில் அவசரம் வேண்டாம்.
அரசியல்
பல உள் அரசியல் விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். நீண்ட நாளைய வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். இந்த பெயர்ச்சியின் மூலம் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்களுக்கு புதிய பதவி வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் புகழும், கௌரவமும் கூட அதிகரிக்கும்.
சொந்த தொகுதியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தங்களின் புகழ், கௌரவம் கூடும்.தாங்கள் புதிய பதவிக்கு உங்களின் பெயர் பரிந்துரை செய்யப்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். உங்கள் தலைமைப் பண்பு பலராலும் நன்கு போற்றப்படும்
விவசாயிகள்
விவசாய நில பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். சிலர் சொந்த ஊரில் உள்ள குலதெய்வக் கோயிலுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள்.
கலைஞர்கள்
யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். உங்களின் படைப்புத் திறன் அதிகரிக்கும்.புதிய ஒப்பந்தங்கள் வரும் இருப்பினும் ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும்.
சக கலைஞர்களால் தேவையற்ற பிரச்சினைகள் வரலாம். சிக்கலான தருணங்களையும், நீங்கள் நன்கு சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். நீங்கள் புதிய பாதையில் பயணிப்பீர்கள். ஏனைய கலைஞர்களின் போட்டி பொறாமைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் தற்சமயம் புதிய கடன் வாங்கவோ அதற்கு விண்ணப்பிக்கவோ வேண்டாம்.
மாணவ – மாணவியர்
மாணவ மாணவியர் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள். உங்களின் நற்சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் நிறைவேறும். தங்களின் நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். உயர்கல்வியில் விரும்பிய படிப்பில் சேருவீர்கள்.
பரிகாரம்:
பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும் சிவ பெருமானை வழிபட்டு வருவது நன்மையைத் தரும்.
Guru Peyarchi 2020 கன்னி
உத்திரம் 2,3,4 ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள்
நவம்பர் மாதம் 20-ம் தேதி இதுவரை தங்கள் இராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் இருந்த குரு பகவான் தற்போது இராசிக்கு 5-ல் பிரவேசிக்கப் போகிறார். குரு மகரத்தில் நீசம் பெற்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார்.
குரு தன்னுடைய 5-ம் பார்வையால் 9-ம் இடத்தையும், குரு தன்னுடைய 7-ம் பார்வையால் 11-ம் இடத்தையும் குரு தன்னுடைய 9-ம் பார்வையால் உங்கள் இராசியினையும் பார்க்கிறார். ஆன்மிகம் நாட்டம் அதிகரிக்கும். தாங்களின் பூர்வ புண்ணியம் காரணமாக அதாவது உங்கள் முன் நல்ல வினைப் பயன் காரணமாக இப்பொழுது உங்களுக்குப் பல நன்மைகள் விளையும்.
தங்களின் பேச்சில் கவனம் தேவை. எவரிடமும் தேவை இல்லா பேச்சுக்கள் வேண்டாம். உங்களிடம் மற்றவர்கள் பேசும் விதத்தினையும், நடவடிக்கைகளையும் கவனித்து உணர்ந்து அதற்கேற்ப உங்களின் செயல்பாடுகளை மேற்க்கொள்ளவும். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். நன்மையும் சிரமமும் கலந்த பலங்கல் இப்பெயர்ச்சியில் உண்டாகும்.
இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு ஆன்மீக நாட்டத்தை மேம்படுத்தும். விரும்பிய ஆலயங்களை தேடிச் சென்று வழிபடுவீர்கள். இதுவரை மனதில் ஏற்பட்ட இனம் புரியாத வேதனைகளும், பயங்களும் முற்றிலும் நீங்கி விடும். நேர்மையாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள் உங்களின் நீண்ட நாளைய ஆசை ஒன்று இந்தக் காலகட்டத்தில் பூர்த்தியாகும். வெளிவட்டார விஷயங்களில் ஈடுபாடு குறையும்.
உடல் ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. வரும் முன் காப்பது நல்லது என்பதற்கு இணங்க உங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு இருந்தால் தங்களின் உடல் ஆரோக்யத்தில் எந்தக் குறைபாடும் ஏற்படாது. மன வளத்தையும் பெருக்கிக் கொள்ள பயிற்சிகள் மேற்கொள்வீர்கள்.
உடல்நலனில் அக்கறை ஏற்படும். ஏதாவது தொற்று நோயினால் தாங்கள் பாதிக்கப்பட்டாலும், அதிலிருந்து நீங்கள் விரைவிலேயே மீண்டு விடுவீர்கள். இருப்பினும் வருமுன் காப்பது நல்லது என்பதற்கேற்ப நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.
குடும்பம்
குடும்பம் மற்றும் உறவுப் பிரச்சினை காரணமாக உங்கள் மனச்சோர்வு ஏற்படும். நிறைய வெளியிடப் பணிகள் இருந்தாலும் தங்களின் குடும்பத்திற்கென நீங்கள் நேரம் ஒதுக்கி அவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். பெரியோரைத் தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்தக் இப்பெயர்ச்சியால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
குழந்தைகள் வேண்டாத நட்பும், பிடிவாத குணமும் கொண்டு செயல்படுவர். இதமான அணுகு முறையால் அவர்களை பக்குவப்படுத்தி நல்வழிப் படுத்துவீர்கள். பெரியோரின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவீர்கள்.
நோய்வாய் பட்டிருந்த தந்தையாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்க எல்லா நன்மைகளையும் தரும் மற்றும் மனோதிடமும் உண்டாகும்.
உத்தியோகம்
உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும், இருப்பினும் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும் அலுவலக ரீதியான பயணங்களும் ஆதாயமும் உண்டு. உடன் பணிபுரிவோரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். புதுப்புது ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்கள் பணிசார்ந்த புதிய விஷயங்களை புரிந்து கொள்வதில் தயக்கம் கொள்ள வேண்டாம்.
உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு நல் வழிகாட்டியாக இருப்பீர்கள். உங்களைச் சார்ந்தவர்களுக்கு தன்னம்பிக்கையும் உத்வேகத்தையும் அளிப்பீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். பணியிடத்தில் பணி தவிர்த்த பிறவிஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. அலுவலக ரீதியான பயணங்களைச் செய்ய நேரிடும். பொதுவாக இந்த குரு பெயர்ச்சியின் காரணத்தால் ஓரளவுக்கு முன்னேற்றம் காண்பார்கள்.
தஙகளின் மேல் அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது மிக அவசியம். இல்லையெனில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையான போக்கை கடைபிடியுங்கள். பணிச்சுமையால் வருத்தம் ஏற்பட்டாலும், உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். அதனால் எதனையும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள்.
தொழில் வியாபாரம்
தொழிலில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். அரசு வகையில் எதிபார்த்த சில சலுகைகள் தங்களுக்கு தேடி வரும். உங்களின் செயல்களுக்கு தொழில் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் வரவேற்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு தொடர்ச்சியான லாபம் கிடைக்கும். முதலீடு குறைவாக செய்து வியாபாரத்தைப் பெருக்கி அதனால் ஆதாயமும் பெறுவீர்கள்.
தங்கள் தொழிலில் உற்பத்தியின் தரத்தை உயர்த்துவதில் பல குறுக்கீடுகளைச் சந்திப்பீர்கள். தொழில் போட்டிகளை சமாளித்து நல்ல இலாபமும் அடைவீர்கள். வரும் இலாபத்தினை எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பீர்கள். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். தொழில் சார்ந்த பயணத்தை அடிக்கடி மேற்கொள்ள வேண்டி இருக்கும். தொழிலில் லாபம் சாராசரியாகவே இருக்கும்.
நிர்வாக நடைமுறைச் செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே நிர்ணயித்த காலவரையில் உற்பத்தி இலக்கை எட்ட முடியும். அடிக்கடி மன அமைதி இழக்க நேரிடும். வாடிக்கையாளர்களைக் கவனமாகக் கையாள வேண்டிய சூழல் இருக்கும். தொழில் கூட்டாளிகளுக்கிடையே சச்சரவுகளும் எழலாம். தொழில் துறையில் முன்னேற நீங்கள் கடுமையாக உழப்பீர்கள்.
பெண்கள்
உங்களின் தெளிந்த சிந்தனைகளால் பிறருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்குவீர்கள். தங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் தடைபட்டவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் திருமணம் கைகூடும். பிரச்னைகளில் மௌனம் சாதித்து பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொண்டால் பின்னாளில் வரும் நஷ்டங்களில் இருந்து தப்பிக்கலாம், ஆடம்பர எண்ணத்துடன் அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
தம்பதியர் ஒற்றுமை உணர்வுடன் நடந்து கொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டச் செய்வர். எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டிய காலமிது. வீண் ஆடம்பர செலவுகளை தவிர்த்திடுங்கள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள். சுயதொழில் புரியும் பெண்கள் குறைவான மூலதனத்துடன் கடின உழைப்பால் சுமாரான உற்பத்தி, விற்பனை காண்பர்.
காதல் மற்றும் திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். உங்களது விருப்பங்கள் யாவும் நிறைவேறும். மனநிறைவும், மகிழ்ச்சியும் உண்டாகும். சிலருக்கு தம்பதியரிடயே கருத்து வேறுபாடு மற்றும், முரண்பாடு காரணமாக வாத விவாதங்களும் தலை தூக்கும் என்பதால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்
நிதிநிலை
கடன் தொந்தரவை ஓரளவு சரிக்கட்டுவீர்கள். பணப் பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம். நிதி விஷயங்களைப் பொறுத்தவரை இது சற்று சவாலான காலம் என்று தான் கூற வேண்டும். செலவுகளை கட்டுபடுத்துவதன் மூலம் மட்டுமே நீங்கள் உங்கள் எதிர்கால நலன் கருதி சிறிதளவாவது சேமிக்க இயலும்.
அரசியல்
அரசியல்வாதிகள் தங்கள் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறும் வகையில் பணி ஆற்றுவீர்கள். தங்கள் கட்சித் தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் உங்கள் செயல்களை மட்டும் செய்து நற்பெயர் வாங்குவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இக்காலத்தில் கூடும். பொதுப்பணி மற்றும் சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். சிலருக்கு புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும்.
விவசாயிகள்
விவசாய நடைமுறைச்செலவுகள் அதிகரிக்கும். கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். அரசிடம் எதிர்பார்த்த சலுகையில் சில கிடைக்கும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் உள்ளவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கும். தங்களுக்கு வரும் வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்ய வேண்டிவரும். உடன் பணிபுரியும் கலைஞர்களின் உதவிகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். தற்சமயம் தாங்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
தங்களுக்கு வாய்ப்புகள் பெருகும். மறைமுக சூழ்ச்சி செய்வோருக்கு தக்க பதிலடி தருவீர்கள். பேச்சிலும் செயலிலும் தாங்கள் கவனம் செலுத்துதல் அவசியம்.
மாணவ – மாணவியர்
மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் படிப்பில் முழு கவனமும் செலுத்துவதுடன் தங்கள் பழக்க வழக்கத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் அலட்சியம் காட்டாமல், திட்டமிட்டபடி படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். மற்றபடி உங்கள் படிப்புக்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த மானியங்கள் கிடைக்கும்.
தொழில் நுட்ப கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பர். கவனச் சிதறல்களை தவிர்க்க வேண்டிய கால கட்டம் இது. ஆடம்பர எண்ணத்துடன் அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
குருவாரத்தில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம். வெண் தாமரை மலர்களால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய நன்மை பெருகும்.
Guru Peyarchi 2020 துலாம்
சித்திரை 3,4 ம் பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1,2,3 ம் பாதங்கள்
நவம்பர் மாதம் 20-ம் தேதி உங்கள் ராசிக்கு தைரிய வீர்ய இளைய சகோதர ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது சுக ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். குரு மகரத்தில் நீசம் பெற்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார்.
குரு தன்னுடைய 5-ம் பார்வையால் 8-ம் இடத்தையும், 7-ம் பார்வையால் 10-ம் இடத்தையும், 9-ம் பார்வையால் 12-ம் இடத்தையும் பார்க்கிறார்.
ஏழை,எளியவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். உங்களை நம்பி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். தங்களின் வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவு செய்ய வேண்டி வரும். பிறரைக் கவரும் வகையில் பேச்சுத் திறமை அதிகரிக்கும்.
மற்றவர்களிடம் எவ்வளவுதான் ஆலோசனை கேட்டாலும் உங்கள் முடிவையே உறுதியான முடிவாக எடுத்துக்கொள்வீர்கள். இப்பெயர்ச்சியில் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்கிற புத்தியும், புதிய நம்பிக்கையும் தோன்றும். திட்டமிட்ட திருமண நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றம் சிறப்பாக நிறைவேறும்.
கூட்டு தொழில் செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். தங்களின் மன வலிமை அதிகரிக்கும். நன்மை தீமைகள் பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள்.
உடல் ஆரோக்கியம்
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்கள் உங்களுடைய உடல் நிலை மற்றும் தாயின் உடல் நிலையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. சிலருக்கு முழங்கால் வலி, மூட்டு வலி ஆகியவை ஏற்படலாம். குடும்பத்தினருக்கு சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டிவரும்.
தாங்கள் சாதாரண உடல் உபாதைகள் என்றாலும் அலட்சியம் வேண்டாம். எச்சரிக்கையுடன் மருத்துவரை அணுகுவது நல்லது.
குடும்பம்
குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் வந்து போகும், இருப்பினும் குடும்பத்தில் குதூகலம் நிறையும். உதவிகள் தேவை படும் போது பெற்றோர்களும் உறவினர்களும் தக்க
சமயத்தில் உதவுவார்கள். குடும்பத்தாருடன் ஆடம்பர கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இருப்பினும் பெரியோர்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிடலாம்.
தங்களின் உற்றார், உறவினர்கள் தங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். தங்கள் குடும்பதில் நீங்கள் சுபகாரிய செலவுகள் செய்வீர்கள் குடும்பத்தில் மூத்தோருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களை மதித்து அனுசரித்து நடந்து கொள்வதால் மூலம் சுமூகமான் உறவை பராமரித்து பிரச்சினைகள் வராமல் காத்துக் கொள்ள முடியும்.
உத்தியோகம்
வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். கடினமான காரியங்களையும சுலபமாக செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிப்பார்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், பிற சலுகைகளையும் பெறுவீர்கள் சிலருக்கு வெளியூர், வெளிநாட்டிற்கு சென்று வசிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய சூழ்நிலைகளில் வாழ உங்களைத் தயார்படுத்திக்கொள்வீர்கள். தொழிலாளர்களுக்கு வருமானம் உயரும் கூடவே சலுகைகள் கிடைக்கும்.
தாங்கள் தங்களது பணிகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். சக பணியாளர்களிடம் நீங்கள் மனம் விட்டுப் பேசுவீர்கள்.
உங்களின் முக்கியமான வேலைகளை ரகசியமாக வைத்துக்கொள்வது சிறப்பு. உங்கள் மீதுள்ள பொறாமையினால் நண்பர்கள் பகைமை பாராட்டுவார்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். இருப்பினும் சில நேரங்களில் உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் போகலாம்.
தொழில் வியாபாரம்
உங்களிடம் கடன் வாங்கியவர்கள் குறித்த காலத்தில் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவார்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வார்கள். உங்களின் செயல்களை சரியாக திட்டமிட்டு செய்து முடித்து விடுவீர்கள். அதனால் உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும். தங்களுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகளும் உங்களிடம் நட்போடு பழகுவார்கள்.
அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்று நடப்பதால் தொழிலில் உயரிய பலன்களை பெறுவீர்கள். உற்பத்தி இலக்கு திட்டமிட்ட காலத்திற்கு முன்னரே நிறைவேறும். ஒரு சில நிறுவனங்களால் கடந்த காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை மனதில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும்.
ஒவ்வொரு நாளும் பலவிதமான சந்தை முறைகளை ஏற்படுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வியாபார போட்டிகளை சிறப்பாக சமாளித்து முன்னேறுவீர்கள். தொழிலில் தங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும் மின்னணு உபகரணங்கள் சார்ந்த வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் முன்னேற்றம் பெறுவர் கூடவே அதிக லாபமும் பெறுவர். இதனால் சேமிப்பு உயரும்.
பெண்கள்
உங்களின் எளிமையான பேச்சினால் அனைவரையும் தாங்கள் சொன்னதை செய்ய வைப்பீர்கள். தங்களுக்கும் தங்கள் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். இதுவரையிலும் உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்த நண்பர்கள் மனம் மாறி மீண்டும் நட்புடன் பழகத் தொடங்குவார்கள். வசதி படைத்தவர்கள் உங்களின் நண்பர்கள் ஆவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். .
தேவை இல்லாத விஷயங்களையும் எண்ணங்களையும் மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டு புலம்பாமல் இருப்பது நல்லது. ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுங்கள். தங்களின் மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும்.
தங்களின் அனைத்துப் பிரச்னைகளையும் நுட்பமாக ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கும் காலகட்டம் இது. புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர்.
காதலர்கள் ம்னம் விட்டுப் பேசுவீர்கள். சில சமயங்களில் தங்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒற்றுமையின்மை தலை தூக்கும்.
நிதிநிலை
உங்கள் வருமானம் உங்கள் தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாக இருக்கும். எதிர் பாராத திடீர் லாபங்கள் சிலருக்கு வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. பழைய வழக்குகள் முடிவதில் காலதாமதம் ஏற்படும். எதிர்பார்த்த இடங்களிலிலிருந்து பண வரவு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தங்களின் பொருளாதார நிலையில் நீங்கள் ஏற்றத்தையும் சிறந்ததொரு மாற்றத்தையும் காண்பீர்கள்.
உங்களுக்கு திடீர் லாபம் அதிர்ஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அரசிடம் இருந்து எதிர்பார்த்து இருந்த மானியங்கள் கிடைக்கும். தங்களின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாரா செலவுகளை சமாளிக்க தங்களின் சேமிப்பில் எடுக்க வேண்டியிருக்கும்
அரசியல்
சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் படிப்படியாக உயரும். புதிய இடங்களில் உங்களுக்கு சிறப்பான வரவேற்புகள் கிடைக்கும். தங்களுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவு சிறப்பாய் இருக்கும் உங்களுக்கு எதிராக இருந்தவர்களும் மாறுவார்கள்
தாங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரி செய்வீர்கள். தங்களின் ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பதவிகள் தங்களை தேடி வரும். எதிரியை வெல்லும் முறையை அறிந்து பணிபுரிவீர்கள்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகள் கட்டுபாட்டுக்குள் இருக்கும். தாங்கள் இயற்கை சூழ்நிலையை கருத்தில் கொண்டு திறமையாக செயல்பட வேண்டியதிருக்கும். கடின உழைப்பு உங்களுக்கு விருப்பமான பலன்களை பெற்றுத் தரும். இக்காலக் கட்டத்தில் தாங்கள் பயிரிடும் பயிர்களால் தங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது
கலைஞர்கள்
சோம்பலைத் தவிர்த்து உழைத்தால் அனைத்து விதமான இனங்களிலும் வெற்றிகளைக் குவிப்பீர்கள். இருப்பினும் புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படும். முன்னேற்றத்திற்கு உதவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்லுங்கள்.
புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் தங்களுக்கு அமையும் அதனை தவறாமல் பயன்படுத்திக் கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறுவீர்கள். தங்களின் செயல்களில் விவேகம் அதிகரிக்கும். நீங்கள் சிலருக்கு இயன்ற உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவையும், அன்பையும் பெற்று முன்னேறுவீர்கள்.
மாணவ – மாணவியர்
மாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் கூடும் மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் சிறப்பு. நண்பர்கள் வழியில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். விளையாட்டுகளில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு முன்னேறவும். கவனம் சிதறாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி பாடங்களை படிப்பதன் மூலம் மட்ட்டுமே தாங்கள் நன்முறையில் தேர்ச்சி பெற இயலும்.
தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஓய்வு நேரங்களில் மனதிற்குப் பிடித்த விஷயங்களிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு சந்தொஷத்தில் திளைப்பீர்கள். அதேசமயம் தங்களின் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானை தரிசித்து வணங்க தங்களின் எல்லா துன்பங்களும் நீங்கும். சிவபெருமானை வழிபடவும்
Guru Peyarchi 2020 விருச்சிகம்
விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை
நவம்பர் மாதம் 20-ம் தேதி முதல் இதுவரை இரண்டாம் இடமான தன வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், இனி இராசிக்கு 3-ம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு மகரத்தில் நீசம் பெற்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார்.
மேலும் குரு தன்னுடைய 5-ம் பார்வையால் 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தையும் குரு தன்னுடைய 7-ம் பார்வையால் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் குரு தன்னுடைய 9-ம் பார்வையால் 11-ம் இடமான் இலாப ஸ்தானத்தையும் பார்க்கை இடுகிறார்.
மனைவிவழி உறவினர்களின் ஆதரவு பெருகும். ஷேர் மார்க்கெட் மூலமாகப் பணம் வரும். சகோதர, சகோதரிகள் இதுவரை உங்களுக்கு உதவாமல் இருந்திருந்தாலும், தற்போது தேடி வந்து உதவி செய்ய தேடி வரக் கூடிய காலமாக அமையும். நட்பு உறவு நல்ல படியாக அமையும்.
உடல் ஆரோக்கியம்
சில நோய்களின் காரணமாக, நீங்கள் சில சிரமங்களை சந்திக்க நேரலாம். இருப்பினும் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும் தியானம் மற்றும் யோகா பயிற்சிகளின் மூலம் தாங்கள் தங்களின் ஆற்றலையும், மன அமைதியையும் வளர்த்துக் கொள்ள இயலும். நோய் தொற்றுகள் போன்றவை உங்களை பாதிக்கக் கூடும்.
சிலருக்கு குறிப்பாக காலில் பிரச்னை அல்லது விபத்துக்கள் நடந்து இருக்கலாம். தற்போது அதனால் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகி நலம் பெறுவீர்கள்.
தாங்கள் உடல் நலத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்வது அவசியம். வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட வண்ணம் நீங்கள் பாதுகாப்புடன் இருப்பதும் நன்மை தரும்.
குடும்பம்
உங்களின் பொறுப்பான பொறுமையான நடவடிக்கைகள் யாவும் குடும்பத்தினருக்கு நன்மைகளை ஏற்படுத்தும். குடும்பத்தினர், உங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் முழுமையாகப் புரிந்து கொண்டு உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தினர் உங்களுடன் அனுசரித்துப் பழகுவார்கள். எதிர்காலத்தில் வரும் இடையூறுகளை முன்கூட்டியே உணர்ந்து அதற்கேற்ப செயல்முறைகளை மாற்றிக்கொள்ள முற்படுவீர்கள்.
சிலர் பிள்ளைகளை வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இன்ப சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். குழந்தைகளால் உங்களுக்கு மிகுந்த மனநிறைவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப விவகாரங்களை நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள். குழந்தைகளுடன் போதிய நேரத்தை, நல்ல முறையில் செலவிட்டு மகிழ்வீர்கள்.
உத்தியோகம்
செய்யும் பணிக்குத் தேவையான மற்றும் ஏற்ற உத்திகளை அறிந்து செயல் படுத்துவதன் மூலம், உங்களையே நீங்கள் மேலும் உங்களை வளர்த்துக் கொள்ள முடியும். நல்ல வேலையில் அமரவும் உதவும் தங்களின் பணிகளை திடமுடன் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு தாங்கள் விரும்பிய ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும். தங்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உங்கள் செயல்களை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.
உடன் பணிபுரிவோர் உறுதுணையாக இருப்பார்கள். அலுவலக ரீதியான வெளியூர் பயணங்களினால் ஓரளவு நன்மைகள் அமையும். உங்கள் வழிகாட்டுதல்கள் அலுவலகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வும் உங்களை தேடி வரும்
அலுவலகத்தில் உங்களின் மதிப்பு உயரக் கூடும். உங்கள் தலைமைத்துவம் அனைவராலும் போற்றப்படும் வேலை தேடும் இளைஞர்களுக்கும் மற்றும் சரியான வேலை இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும்.
தொழில் வியாபாரம்
தொழிலில் உங்களின் நிர்வாகத் திறமை மேலும் அதிகரிக்கும். பண வரவு சரளமாகவே இருக்கும். தொழில் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு ஆதரவாக இருப்பீர்கள். தொழில் ரீதியாக தேவையான பல வெளியூர் பயணங்களை செல்ல வேண்டி இருக்கும். ஊழியர்கள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். உங்களின் செயல்திறன் கூடும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் சிலருக்கு நஷ்டங்கள் உண்டாகலாம்.
தங்களின் கூட்டாளிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து நடந்து கொள்வார்கள். இருப்பினும் தொழிலில் புதிய முதலீடுகளை நன்கு யோசித்த பிறகே செய்யவும். தங்களின் சிறந்த நிர்வாகத் திறமையும், அதிரடித் திட்டங்களும் தொழில் முன்னேற்றத்திற்கு சரியான வழிகாட்டியாக அமையும். ஓய்வெடுக்க முடியாத அளவுக்குப் பரபரப்பையும் அதிக நேரம் உழைக்க வேண்டிய நிலையையும் தருவதாக இப்பெயர்ச்சி தங்களுக்கு அமையும்.
வீடு வாங்கல் விற்றல் தொழில் செய்வோர் ஆதாயங்களைப் பெற்று தொழிலில் முன்னேற இயலும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நிதிநிலை மிகவும் திருப்திகரமாக இருக்காது.
பெண்கள்
தங்களுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த குரு பெயர்ச்சியாக அமையும். கணவர் மற்றும் காதல் வகையில் கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து மீள்வீர்கள். கணவர் உங்களை மதித்து நடப்பார். அவருடனான ஒற்றுமை அதிகரிக்கும்.சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் தோற்றத்தில் வசீகரம் உண்டாகும். பல வழிகளிலும் வருமானம் பெருகும்.
தங்கள் துணையுடன் மேலும் அன்னியோன்யம் கூடும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த குழந்தைபேறு பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் அமையும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். காதலர்க்ளுக்கு இது சாதகமான பெயர்ச்சிக் காலமாக அமையும். தங்களின் கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனத்தில் நிழலாடும்.
உரிய நேரத்தில் தங்களின் பெற்றோர் மற்றும் தாய்வழி உறவினர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகதவர்கள், காதலர்கள் தங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற காத்திருக்க வேண்டியது அவசியம். வாழ்க்கைத் துணைவரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.
திருமண உறவில் இருந்த கசப்புகள், பிரிவுகள், வெறுப்புக்கள் விலகி அமைதி நிலவும். பிரிவில் இருந்தவர்கள் பேச்சு வார்த்தைகள் மூலம் மனம் மாறி, மீண்டும் சேரும் பாக்கியம் பெறுவர்.
காதலர்களின் எதிர்கால எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி அடையும். உங்களின் காதலுக்கு குடும்ப, உறவினர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். திருமண பாக்கியம் அமையும்.
நிதிநிலை
பங்கு வர்த்தகம் போன்ற ஊக அடிப்படையிலான முதலீடுகளால் உங்களுக்கு லாபம் தரும். உங்களுக்கு வரும் சொத்தின் விற்பனை செய்வதும், நல்ல ஆதாயம் தரலாம் வருமானம் சீராக இருக்கும். வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். . பல வழிகளிலும் தங்களுக்கு வருமானம் வந்து பொருளாதார நிலைமை சீரடையும்.
முந்தைய முதலீடுகள் மூலம் நீங்கள் இலாபம் பெறுவீர்கள். இருப்பினும் தங்களின் சேமிப்பு மிக குறைவே.
சிலருக்கு புது வீட்டுக்கு போகும் வாய்ப்பு அமையும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் விலகும், சுமுகமான பாகப்பிரிவினை ஏற்படும். நீண்ட நாட்களாக விற்க்க நினைத்த பழைய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் விற்பனையாகும். இதனால் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.
அரசியல்
சமுதாயத்தில் உங்களின் நிலையை உயர்த்திக்கொள்வதற்கு ஏதுவான நல்ல காரியங்களைச் செய்வீர்கள். தங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் கூட உங்களுக்கு உதவி செய்யும் காலகட்டமாக இது அமைகிறது உங்களுக்கு எதிராக, தேவையற்ற போட்டி, பொறாமை போன்றவையும் ஏற்பட்டு தீரக்கூடிய காலகட்டமாகும்..
. இருப்பினும் தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.உங்களின் மதிப்பு, மரியாதை உயரும் தங்களுக்கு சில தடைகள் வரினும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். கட்சியிலும் ஆட்சியிலும் சமூகத்திலும் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள் தங்கள்.தொகுதியில் தங்களின் மதிப்பு கூடும்.
விவசாயிகள்
விவசாயிகள் பாதிப் பணம் தந்து முடிக்கப் படாமல் இருந்த நிலத்திற்க்கு, மீதிப் பணம் தந்து கிரையம் செய்து தங்களதுவாக்கி கொள்வீர்கள். பரம்பரை சொத்துக்கள் தங்களுக்கு சுமூகமாக கிடைக்கும்.
கலைஞர்கள்
கலைத்துறையினருக்கு இந்த குரு பெயர்ச்சியினால் புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். திட்டமிட்ட பணிகளில் பொறுப்புடன் நடந்து கொண்டால் எதிர்வரும் சிரமங்களைத் தவிர்க்கலாம். ரசிகர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக கலைஞர்கள் நட்பு பாராட்டுவார்கள். சிலருக்கு அரசு விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். அனைவரிடமும் சுமுக உறவுடன் பழகுவதும் நலம் பயக்கும்.
மாணவ – மாணவியர்
மாணவ மாணவியர் கல்வியில் விடா முயற்சியுடன் நீங்கள் செயல்பட்டால் மற்றும் வெற்றிகரமாக சாதிக்க முடியும் பெற்றோரின் ஆதரவு பெருகும். சிலர் விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். தங்களின் சீரிய முயற்சியால் மட்டுமே அதிக மதிப்பெண்களை பெறலாம். சரியான நுண்ணறிவும், முறையான உணர்வும் உங்களை படிப்பில் மேலே உயர்த்தும்.
பரிகாரம்:
துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை தோறும் மாலை நேரத்தில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.
Guru Peyarchi 2020 தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்
நவம்பர் மாதம் 20-ம் தேதி முதல் இதுவரை தங்களின் இராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான், இனி இராசிக்கு 2-ம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு மகரத்தில் நீசம் பெற்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார்.
குரு தன்னுடைய 5-ம் பார்வையால் 6-ம் இடத்தையும், குரு தன்னுடைய 7-ம் பார்வையால் 8-ம் இடத்தையும் குரு தன்னுடைய 9-ம் பார்வையால் 10-ம் இடத்தை பார்க்கிறார்.
இந்தப் குரு பெயர்ச்சி உங்களுக்கு வேலை, சுயதொழில், குடும்பம், செல்வம், சொத்து ஆகியவற்றின் மூலம் நன்மை தருவதாக அமையும். இந்த பெயர்ச்சியின் மூலம் புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் ஏற்பட்டு இறை அருளை நோக்கி பயணிப்பீர்கள் பொதுக்காரியங்களில் உங்கள் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.
உடல் ஆரோக்கியம்
உங்களின் தேகம் ஆரோக்கியம் பெற்று பொலிவடையும். இருப்பினும் அவ்வப்போது வயிறு, தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் தோன்றி மறையும். எனவே தங்களின் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும்.
குடும்பம்
குடும்பத்தினர் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள்; இதனால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சூழ்ந்திருந்த பிரச்னைகள் யாவும் விலகி நல்ல தெளிவு பிறக்கும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்பச் செலவை சமாளிக்கத் தேவையான பண உதவியும் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது.
குடும்பத்தினருடன் வெளியில் விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிலவும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்த வாய்ப்புகள் கைகூடிவரும். தங்களின் பிள்ளைகள் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையைக் காத்திடும் வகையில் நற்செயல்களைச் புறிந்திடுவர். அதனால் பிள்ளைகள் மூலம் பெருமை அடைவீர்கள்.
தங்களின் முரட்டுதனத்தை விட்டுவிட்டு சற்று குடும்பதிற்காக இறங்கி வாருங்கள். பெற்றோருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். தங்களின் உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். குடும்ப மங்கல நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிப்பீர்கள்.
உத்தியோகம்
உங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும் பெயர்ச்சியாக இது அமையும். தங்களின் நுண்ணிய அறிவால் புதிய ஆற்றலைப் பெற்று முன்னேறுவீர்கள். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்துக்கொள்வது நன்மை பயக்கும். இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
தங்களின் நியமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் காலகட்டம். புதிய பதவி, அளப்பரிய நற்பலன்கள் பல எளிதாக தங்களை வந்து சேரும். தாங்கள் நிறைய வேலை செய்து இவ்வளவு நாளும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே என ஏங்கியிருந்த உங்களுக்கு, இனி அந்த நிலை மாறும். உங்களின் மேலதிகாரிகளிடம் உங்களின் சொல் வாக்கு, செல்வாக்கு ஏற்படும்.
வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேர்ந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். புதிய பொறுப்புகள் சிலருக்குக் கிடைக்கலாம்.வேலை பார்க்கும் இடத்தில் வெறுப்பைக் காட்ட வேண்டாம். தாங்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். சிலருக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.
தொழில் வியாபாரம்
கட்டுமான தொழில் புரிவோர் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம் ஆகும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலன் அடைவீர்கள். வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவர செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். தொழிலில் தாராள லாபம் உண்டு புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் துவங்கலாம்.
தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தொழிலில் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தொழிலதிபர்கள் தங்களின் தொழிலை அபிவிருத்தி செய்ய பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும். மற்ற தொழில் செய்வோருக்கும் புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
தாங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு ஏதேனும் திட்டம் வைத்திருந்தால் அதை செயல்படுத்தக் கூடிய காலம் இது. அதன் மூலம் உங்களுக்கு நல்ல பலனும், லாபமும் கிடைக்கக் கூடும்.
பெண்கள்
தாய் வழி உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களைப் பற்றி வீண் புரளி சொல்பவர்களிடமிருந்து எப்போது விலகி இருப்பது உங்களுக்கு நன்மை அளிக்கும். உற்றார், உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.
கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே அவரின் அன்பைப் பெறவும் பிரச்சனைகளை தவிர்க்கவும் முடியும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன், இணைந்து ஆலோசனை செய்வது குடும்பவாழ்வு சிறக்க மேலும் உதவும். தங்களிடையே சந்தேகங்கள் கூடவே கூடாது. வீண் செலவு உண்டாக்கும்.
காதலர்களுக்கும் இளம் வயதினருக்கும் திருமண முயற்சி நிறைவேறும். ரகசியங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்கள் எதிலும் மேன்மை அடைவீர்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.
நிதிநிலை
பரம்பரை சொத்து உள்ளோருக்கு அச்சொத்து பாகம் தங்களுக்கு வர வாய்ப்பு உள்ளது பணக் கஷ்டம் நீங்கும். நிதி சார்ந்த முக்கிய முடிவுகளை சரியான ஆலோசகர்களின் ஆலோசனைகளைக் கேட்டு முடிவு எடுக்கவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும்.
பூர்வீக சொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உயரும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.
அரசியல்
பொதுக்காரியங்களில் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டாகும். எதிர் கட்சியினரின் சதிகளை தவிடுபொடியாக்கி விடுவீர்கள். சட்டப் பிரச்னைகள் ஏதேனும் இருப்பின் அதனை பெரிதாகாமல் பார்த்துக்கொள்வது சிறப்பு.
தங்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். தங்களின் தொண்டர்கள் உங்களை சிறிது அலட்சியப் படுத்துவார்கள்.அதனை பெரிதுபடுத்த வேண்டும். தாங்கள் கட்சியில் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு துறை அதிகாரிகளும்
உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். அரசியல் பிரமுகர்கள் தவறான வழிகளில் செல்ல வேண்டாம். ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரிடும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தாங்கள் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.
விவசாயிகள்
இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் புது முயற்சிகள் தோல்வியில் முடியலாம். சொத்து சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.
கலைஞர்கள்
வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேர்ந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். தங்களுக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அவசியம் ம்ற்றும் தேவை இல்லாத வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பினால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள்.
தாங்களுக்கு இப்பெயர்ச்சியில் அனுகூலமான பல திருப்பங்கள் உண்டாகும். தங்களுக்கு பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் உதவியால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நீங்கள் என்ன முயற்சிகள் செய்தால் அது வெற்றியை தேடி தரும். போட்டியாளர்களின் சதிகளை தவிடுபொடியாக்கி விடுவீர்கள்.
தாங்கள் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
மாணவ – மாணவியர்
மாணவ மாணவையர் படிப்பில் தங்களின் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறலாம் மாணவர்கள் முழு சிரத்தையுடன் படிப்பது நல்லது. எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். கோபத்தைக் குறைப்பது நல்லது.
பரிகாரம்:
பால முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபட கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும். மேலும் கோயிலுக்குச் சென்று விநாயகரை வணங்கி, நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானுக்கு, இரு புது அகல்விளக்கை மஞ்சள் தடவி நெய் தீபம் ஏற்றி முல்லை பூ சாற்றி வழிபட்டு வரவும்.
Guru Peyarchi 2020 மகரம்
உத்திராடம் 2,3,4 ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 ம் பாதங்கள்
நவம்பர் மாதம் 20-ம் தேதி முதல் இதுவரை தங்களின் இராசிக்கு விரயம் மற்றும் அயன போக ஸ்தானமான 12-ல் சஞ்சரித்து வந்த குரு பகவான், இனி தங்களின் இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு மகரத்தில் நீசம் பெற்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார்.
குரு தன்னுடைய 5-ம் பார்வையால் 5-ம் இடத்தையும் குரு தன்னுடைய 7-ம் பார்வையால் 7-ம் இடத்தையும், குரு தன்னுடைய 9-ம் பார்வையால் 9-ம் இடத்தையும் பார்ப்பக்கிறார்.
சற்று மந்தமான நிலை உண்டாகலாம். இந்த குரு பெயர்ச்சியால் தெளிவாக திட்டமிட்டு உடனுக்குடன் செயல்படுவீர்கள். உங்கள் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தை ஓட்டும் போது மிக கவனமாக இருப்பது அவசியம். விபத்துகளைத் தவிர்க்கவும், வீணான சர்ச்சையையும் தவிர்க்கவும். நீங்கள் ஆன்மிக விஷயங்களில் அதிக செலவு செய்வீர்கள். மின்னணு, மின்சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். சிலருக்கு பல வகையான முன்னேற்றங்களும் உண்டாகும்.
நண்பர்களிடம் எதிர்பார்க்கிற உதவி கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பல புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களிடம் எச்சரிகையுடன் பழகுங்கள். குடும்பத்தினருடன் சென்று குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சீராக நன்றாக இருக்கும். கடினமான உழைப்புக்கு நடுவே சற்று ஓய்வெடுத்துக் கொள்ளவும். உடல் நலத்திலும் அக்கறை காட்டவும். ஆரோக்கியம் கூடும். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.
குடும்பம்
குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் பேச்சுக்கள் நடக்கும். குடும்பத்தில் உற்றார், உறவினர்கள் முழுமையான ஆதரவைத் தந்து உங்களின் கைகளை பலப் படுத்துவார்கள். சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட பிணக்குகளைப் பேசித் தீர்த்துக் கொண்டு உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்லும் நிலை உருவாகும். பிள்ளைகள் தொந்தரவு தராத வகையில் நல்ல குணத்துடன் நடந்துகொள்வர். உறவினர் குடும்ப சுபநகிழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்கிற சூழ்நிலையும் அதனால் கூடுதல் செலவும் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள்.
தங்களின் பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படைவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டுத் திருமணம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். தங்கள் பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டாதீர்கள். பிள்ளைகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது
உத்தியோகம்
தங்களுக்குக் கீழ் பணி புரிபவர்களுக்கு மன உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுப்பீர்கள். எதிலும் அவசரமும் பரபரப்பும் வேண்டாம் தவறு செய்பவர்களிடம் இருந்து சுமுகமாக விலகி விடவும் மனச் சோர்வுக்கு ஆளாகாமல் உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் வேலையில் திருப்தி காண்பீர்கள்.
தங்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று காலதாமதத்துடனே ஏற்ப்பார்கள். எனவே பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். அவ்வப்போது உடல்நல பாதிப்பு வரலாம் என்பதால் பணிகளில் தாமதம் ஏற்படும்.
தாங்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்ற வேண்டிய காலமாகுவும். தாங்கள் அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சிலருக்கு செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். சிலருக்கு பதவி உயர்வை கிடைக்கும்; பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.
தொழில் வியாபாரம்
தொழிலிலும் வியாபாரத்திலும் அதிக முதலீடுகள் போட வேண்டாம். புதிய வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம். தங்களின் முயற்சிகளுக்குத் தகுந்த இலாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.
மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். தைரிய சிந்தனையும், மனதில் நம்பிக்கையும் வளரும். வெளியூர் பயணம் புதிய அறிமுகங்களை பெற்றுத்தரும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
வியாபாரிகள் தேங்கிக் கிடந்த சரக்குகளை குறைவான விலைக்கு விற்று முடிப்பீர்கள். புகழ்பெற்ற பெறு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். சிலருக்கு தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பெண்கள்
இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவத்தை அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். உற்றார், உறவினர்கள் ஒன்றுமில்லாத விஷயத்தைக் கூடப் பெரிதுபடுத்தி விடுவார்கள் எனவே அவர்களிடம் தற்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நலம்.
கோயில்களில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். தாங்கள் கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.
உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களிடம் வாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும். எனவே எவரையும் எளிதில் முழுமையாக நம்பவேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில், கணவன், மனைவிக்குள் வரும் சிறுசிறு பிரச்னைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.
காதலருக்கு திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். சிலருக்கு புதிதாக அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும்
நிதிநிலை
நிதி நிலையில் மேம்பாடு ஏற்படும். உங்கள் பொருளாதார நிலையும் உயரும். பண வசதிக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. கண்டிப்பாக யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். புதிய கடன்கள் வாங்க வேண்டாம்.
பணவரவுக்கான நல்ல வாய்ப்புகளும் தேடி வரும் என்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் நிதிநிலை பற்றி கவலைப்பட வேண்டி வராது. வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியை காத்துக் கொண்டாலே போதுமானது. சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவார்கள். யாரிடமும் வாக்குறுதி தரவேண்டாம்.
அரசியல்
வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.தங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதனையும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. மனத்தில் பட்டதை பளிச்சென பேசி மற்றவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாவீர்கள். பழைய வழக்குகள் சாதகமாகும்.
தங்களுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தங்களின் தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். தங்கள் கட்சி மேலிடத்தின் ஆதரவால் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். தாங்கள் கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்
விவசாயிகள்
உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பூர்விகச் சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள்.
கலைஞர்கள்
வசீகரமான பேச்சும் மிடுக்கான நடையும் உங்களின் தன்னம்பிக்கையையும் வெளிப்படும் தங்களுக்கு முன் அறிமுகம் இல்லாதவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர் பயணம் புதிய அறிமுகங்களை பெற்றுத்தரும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன்களை பெறுவீர்கள். தங்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தங்கள் செயல்களுக்கு இருந்த தடை மெதுவாக நீங்கும்.
உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக தேவை இல்லாமல் வீணாக்காதீர்கள். எப்போதும் நிதானமாகவே பேசி சக கலைஞர்களின் அன்பைப் பெறவும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும். தங்களின் திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும்.
மாணவ – மாணவியர்
ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் நடப்பது நன்று. மாணவர்கள் தங்கள் லட்சியத்தை நோக்கி மட்டுமே பயணப்பட வேண்டும் தங்களின் முயற்சிகளை இரு மடங்காக்குங்கள். தங்களின் விளையாட்டுத்தனத்தைக் குறைத்து கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வரளி மாலையை அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும். துர்க்கை தரிசனம் உடனுக்குடன் கைகொடுக்கும்.
Guru Peyarchi 2020 கும்பம்
அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள்
நவம்பர் மாதம் 20-ம் தேதி முதல் இதுவரை தங்களின் இராசிக்கு இலாப ஸ்தானமான 11-ம் வீட்டில் சஞ்சாரம் செய்த குரு பகவான் இனி தங்களின் இராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். குரு மகரத்தில் நீசம் பெற்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார்.
குரு தன்னுடைய 5-ம் பார்வையால் 4-ம் இடத்தையும் குரு தன்னுடைய 7-ம் பார்வையால் 6-ம் இடத்தையும் பார்ப்பதால் குரு தன்னுடைய 9-ம் பார்வையால் 8-ம் இடத்தையும் பார்க்கிறார்.
தாங்கள் பொதுக்காரியங்களில் ஈடுபட்டு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.உங்கள் குழப்பமான பேச்சு மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என்பதால் பேச்சில் கவனம் தேவை. சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
தங்களின் தந்தை வழி உறவினர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு நடப்பதில் மிகுந்த பிரியம் கொள்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். முன் கூட்டியே யோசித்து உங்கள் செயல்களை சிறப்பாக முடித்துவிடுவீர்கள்.
புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.திருமண வயதினருக்கு நல்ல வரன் கிடைத்து மங்கல நிகழ்வு இனிதாக நிறைவேறும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜீரணப் பிரச்சினை போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு மனதில் நீண்ட நாட்களாக தங்களின் வியாதி பற்றி இருந்த கவலை நீங்கி நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும்.
குடும்பம்
நீங்கள் உறவினர்களுடனும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனும் மோதல் போக்கை தவிர்ப்பது அவசியம். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். மங்கல நிகழ்ச்சி திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேறும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தினரின் உண்மையான அன்பும் அனுசரணையும் தான் உங்களுக்கு கை கொடுக்கும்.
உத்தியோகம்
பணித்துறையில் சாதகமான இடமாற்றமும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுங்கள் வளர்ச்சி ஏற்படும். சிலருக்கு வெளியூர், வெளிமாநிலம் செல்லக் கூடிய அமைப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். மேலும் அலுவலக வேலைகளில் பளு குறையும்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. இல்லையெனில் பலருடன் பகைத்துக்கொள்ள வேண்டி இருக்கும். தங்களின் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். தங்களின் குறிக்கோளை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைக் கேட்டு அதற்கேற்றபடி தேவையான மாறுதல்களைச் செய்வீர்கள். அதற்கு தங்களின் அனாவசிய எண்ணங்களையும், சிந்தனைகளையும் மனதிலிருந்து அகற்றவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிலர் உத்தியோக சம்பதமாக பயணம் செல்ல வேண்டி இருக்கும். பயணத்தின் பொழுதும், உணவிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சிலருக்கு தங்களின் வருமானம் படிப்படியாக உயரும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாகவும் பக்கபலமாகவும் நடந்துகொள்வார்கள். இருப்பினும் பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை. எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம்.
சிலருக்கு பணி நிரந்தரம் ஏற்படும். பதவி உயர்வு மற்றும் எதிர்பார்த்த பணி இட மாற்றம் ஏற்படும். சிலர் இப்பெயர்ச்சியில் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.செயல்திறமை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம்.
தொழில் வியாபாரம்
பங்குசந்தை முதலீடுகளை சுத்தமாக தவிர்க்கவும். தங்களின் தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதப்போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தங்களின் கூட்டாளிகள் பக்கபலமாக இருக்க மாட்டார்கள்.
தொழிலில் சிறிது பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மன உறுதியுடன் அவற்றை சமாளிப்பீர்கள். தங்களுக்கு இது லாபகரமான பெயர்ச்சியாக அமையப் போகிறது. தங்களின் பொருட்களின் விற்பனை சிறப்பான முறையில் நடக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாண்டு இலாபம் ஈட்டுவீர்கள். என்றாலும் கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம்.
சிலருக்கு உற்பத்தியை உயர்த்த அனைத்து வசதிகளும் திருப்திகரமாக கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். லாப உயர்வு சேமிப்பை உருவாக்கும். பிற சலுகைகளால் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிப்பீர்கள்.
பெண்கள்
கணவர் மற்றும் குழந்தைகளின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் அவசியம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தாங்கள் எல்லா விஷயத்தில் இறங்கும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். எந்த முக்கிய முடிவையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும்.
காதலர்கள் பழைய தாக்கங்களை மறக்க முயற்சி செய்யுங்கள். தவறுகளை மன்னிப்பதும் பிரச்சினைகளின் தீவிரத்தைக் குறைக்கும். மனதில் கற்பனை பயங்களும் உண்டாகலாம். அவ்வப்போது எதையோ இழந்துவிட்டது போன்ற மனக் கவலைகளுக்கு ஆளாவீர்கள். காதலர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக்கொள்ள வேண்டி இருக்கும். மனோ பலத்தை அதிகரிக்க அமைதியாகவும் டென்ஷன் இல்லாமலும் இருக்க இறைவனின் பிரார்த்தனை செய்து வாருங்கள்.
ஆடம்பர செலவுகள் வேண்டாம். தேவையான பணவசதி கிடைக்கும்.தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். தங்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். கர்ப்பிணிகள் தகுந்த சிகிச்சை மற்றும் ஓய்வு போன்றவற்றை பின்பற்றுவது அவசியம். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது
நிதிநிலை
உங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பதால், இம்முன்னேற்றத்தினை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது எதிர்காலத்திற்கு ஏற்றதாக அமையும். நிதி நிலை சீராக இருந்தாலும் பெரிய முதலீடுகளைச் செய்ய வழி ஏற்படாது.
லாபகரமான முதலீடுகள் செய்யலாம். அதற்கான பொருளாதார சூழல்கள் உருவாகும். கடன் பிரச்சினை குறையும். சிலர் பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தும் தங்களுக்கு தேவையானப் பொருட்களை வாங்கியும் மகிழ்வீர்கள்.
சிலருக்கு மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபம் உண்டாகும். எல்லா நன்மையும் உண்டாகி உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.
அரசியல்
இழுபறியாக இருந்த விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். அரசு அதிகாரிகளுடனான உங்கள் தொடர்பு அனுகூலமான திருப்பங்களைக் கொண்டுவந்து சேர்க்கும். இந்தக் காலகட்டத்தில் சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள்.
சிலர் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவார்கள். தாங்கள் புதிய பதவிகள் பெறுவீர்கள். தங்களுக்கு தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம் சாதித்துக் கொள்வீர்கள்.
தங்களுக்கு தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்யும் சூழல் உண்டாகும். அரசியல் எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது இருப்பினும் அவர்களிடம் எச்சரிக்கை தேவை. கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.
விவசாயிகள்
உபரி வருமானம் உண்டு. விவசாயம் சார்ந்த உபதொழில் துவங்க வாய்ப்பு உருவாகி நிறைவேறும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.
கலைஞர்கள்
தங்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். தங்களின் இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். இருப்பினும் தாங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே தங்கள் துறையில் வெற்றி நிலையை எட்டலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள்.
தங்களின் துறை சார்ந்த அறிவு திறமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள்.
மாணவ – மாணவியர்
கல்வியில் சிறக்க மாணவர்கள் தொடர்ந்து விடாமுயற்சி செய்ய வேண்டும். மாணவர்கள் படிப்பில் அதீத கவனம் செலுத்துவது அவசியம். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி அன்பு வளரும். படிப்புக்கான பண உதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்:
சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும். மேலும் விநாயகப் பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
Guru Peyarchi 2020 மீனம்
பூரட்டாதி 4ம் பாதம், ரேவதி, உத்திரட்டாதி,
நவம்பர் மாதம் மீன ராசியினருக்கு தங்கள் இராசி அதிபதியான குரு 20.11.2020 அன்று திருகணிதப்படி இராசிக்கு 11-ல் வருவதும், ஆண்டு கிரகங்களான ராகு 3-ல் கேது 10-ல் மற்றும் சனி 11-ல் சஞ்சரிப்பதால் தாங்கள் நீண்ட காலமாக எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். இதுவரை இருந்து வந்த பொருளாதார மந்தநிலை மாறி செல்வநிலை மேன்மை அடையும். செய்யும் தொழிலால் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம் சனி பகவானுடைய ஆட்சி வீடாக இருந்து குரு மகரத்தில் நீசமாகி இணைந்து இருப்பதால், இங்கு நீசமடைவது தவிர்க்கப்பட்டு அது நீசபங்கம் ஆகி யோகமாக மாறிவிடுகிறது.
மேலும் குரு பார்க்க கோடி நன்மை என்றும், கோடி தோஷம் விலகும் என்பதற்கேற்ப இராசிக்கு 11-ல் வரும் குரு தன்னுடைய 5-ம் பார்வையால் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியம் மற்றும் புது உத்வேகத்துடன் செயலாற்றி செய்யும் பணிகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள். சுக போகங்களும் அதிகரிக்கும். குரு தன்னுடைய 7-ம் பார்வையால் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளால் பெருமையும், அனுகூலங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். தங்களின் மனது ஒரு தெளிவான மன நிலையில் இருப்பதை உணர்வீர்கள்.
குரு தன்னுடைய 9-ம் பார்வையால் ஏழாம் வீட்டை பார்ப்பதால் உடல் நிலையில் இருந்து வந்த உபாதைகள் படிப்படியாக குறைவதை உணர்வீர்கள். தம்பதியர் இடையே இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். அன்னியோன்யம் மேம்படும். கூட்டுத் தொழில் மேம்படும், புனித யாத்திரை செல்லும் யோகம் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மந்தநிலை விலகும். எடுக்கும் முயற்சிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றத்தைப் அடைவீர்கள். உற்றார் உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறி பிரிந்தவர்களும் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள். மேலும் மனதளவில் புத்துணர்ச்சியுடன் திகழ்வீர்கள். மருத்துவச் செலவு குறையும்.
உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தினமும் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் எடை அதிகரிப்பு, உடல் பருமன் மற்றும் கொழுப்பு கூடுதல் போன்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்,
குடும்பம்
உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. உங்களுடைய பிள்ளைகள் மேன்மை அடைவார்கள். சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வ காரியங்களில் கலந்து கொள்வீர்கள். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும்
குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். குரு பகவானின் சுபப் பார்வை உங்கள் களத்திர ஸ்தானத்தின் மேல் விழுவதால்,கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு சிறந்து விளங்கும். பெரியோர்களின் ஆசியும் கிடைக்கப்பெறுவார்கள். உறவினர்களிடம் மற்றும் பங்காளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறையும். காதல் கைகூடும்.
குரு பார்வையால் சகோதரர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது பல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் கடந்த கால நெருக்கடிகள் படிபடியாக விலகும். பணியில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் பணியின் காரணமாக இடமாறி குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். கல்வி மற்றும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வேலைபளு குறையும். ஒரு நிரந்தர வருமான நிலையை அடையலாம்.
தொழில் வியாபாரம்
சுயதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகள் மெல்ல மெல்ல விலகி நல்ல முன்னேற்றம் பெறும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழிலை விரிவு செய்யும் நோக்கம் நிறைவேறும். புதிய கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணியாட்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சிலர் புதிய தொழில்/ கூட்டுத்தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் கைகூடி வரும், புதுப்புது யுக்தி, புத்தி யோசனைகள் தோன்றி தொழில் நல்லவிதமாக அமையும். உங்களின் திறமைகள் மெருகேறி, சமயோசித சாமர்த்தியங்கள் மேலோங்கும்.
வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சொத்து சேர்க்கை ஏற்படும். பணியாளர்களிடையே முழு ஒத்துழைப்பை எதிர்பார்க்கலாம். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
பங்குச் சந்தை மற்றும் ஊக அடிப்படையிலான முதலீடுகளுக்கு நல்ல வருமானம் தரும்.
பெண்கள்
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள் கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். குரு பகவானின் சுபப் பார்வை உங்கள் களத்திர ஸ்தானத்தின் மேல் மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும்.பணிபுரியும் பெண்கள் எதிர்பாராத உயர்வுகளை அடைவார்கள். உங்கள் கணவரிடம் நீங்கள் அபாரமான அன்பு, பாசம், பரிவு ஆகியவற்றைக் காட்டுவீர்கள்.
நிதிநிலை
பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. மன நிம்மதி ஏற்படும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் ஏற்றமான பலன்களை பெற முடியும். புதிய நட்புகள் கிடைத்து பல்வேறு வகையில் வளமான பலனை அடைவீர்கள். நீண்ட நாள் கடன்கள் அடைபடும்
குரு11- ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். வீண் வம்பு வழக்குகளில் இருந்து வந்த சகல பிரச்சனைகளும் விலகி மன நிம்மதி ஏற்படும். இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்து வந்த கோர்ட் வழக்குகள் இப்போது முடிவுக்கு வரும். பிறரை நம்பி பெரிய தொகை கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
விவசாயிகள்
பல வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும்.புதுப்புது யுக்தி முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும்.
கலைஞர்கள்
உங்களை தேடி நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகள் கைக்கு கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள். ஆனால் வெளிநாட்டு பயணங்களில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
மாணவ – மாணவியர்
கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். கடந்த கால மந்த நிலைகள் விலகும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும். விளையாட்டுப் போட்டி, கட்டுரை, கவிதை போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் அமையும். படைப்பாற்றல், புதுமையைப் புகுத்துதல், ஆராய்ச்சில் ஆர்வம் போன்ற உங்களது நற்பண்புகள், நன்கு வெளிப்படும்.
உங்கள் உயர் கல்வி மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் கனவும் நிறைவேறக்கூடும். உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் அண்டை அயலார் என அனைவரும்உங்களிடம் ஆதரவாகப் பழகுவார்கள். எனவே, நீங்கள் எங்கு இருந்தாலும் யாருடன் இருந்தாலும் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் அனுபவிப்பீர்கள்.
பொதுவாக, இந்தப் குருப்பெயர்ச்சி உங்களுக்கு பல நன்மை மற்றும் மேன்மை அளிக்கும் பெயர்ச்சியாக அமையும். எதிர்பாராத திடீர் ஆதாயங்களும், வரவுகளும் அமையும். குடும்பத்திலும், அலுவலகத்திலும் நல்ல பெயர் கிட்டும். வேலை விஷயத்தில் நீங்கள் எடுத்த காரியம் நல்ல முறையில் நிறைவேறும். எனவே மீன இராசியினை பல வாய்ப்புகளை பெற்று தங்கள் கனவுகள் நிறைவேற்றி கொள்வதற்கு, இது சரியான காலம் என்று சொல்லலாம். இவை பொது பலன்களே, அவரவர் ஜாதக அமைப்பு படியே பலங்கள் அமையும்.
பரிகாரம்:
வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலையும் பொன்னரளிப்பூ மாலை அல்லது மஞ்சள் நிறப்பூ மாலையும் அணிவித்து வழிபட்டால் தொல்லைகள் பறந்தோடும். துர்க்கையம்மன் வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும்.